
காபூல்:ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான கஸ்னியில் அமெரிக்க ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக தாலிபான் அறிவித்துள்ளது. குறைந்தது 14 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக தாலிபான் தலைவர் ஸபீயுல்லாஹ் முஜாஹித் கூறுகிறார். ஆந்தார் மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
82 எம்.எம் ராக்கெட்டை உபயோகித்து ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டது. அதேவேளையில், இச்சம்பவத்தை ஆப்கான் அதிகாரிகளோ, நேட்டோ வட்டாரங்களோ உறுதிச் செய்யவில்லை. ஆக்கிரமிப்பு படையினரின் ஏராளமான ஹெலிகாப்டர்களை கடந்த சில மாதங்களாக தாலிபான் சுட்டு வீழ்த்தி வருகிறது. தாலிபான் வெளியிடும் அறிவிப்புகளை பின்னர் நேட்டோ உறுதிச் செய்வது வழக்கமாகிவிட்டது.
No comments:
Post a Comment