
அஹ்மதாபாத்:ஏராளமான முஸ்லிம்களை போலி என்கவுண்டரில் கொலைச்செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐ.பி.எஸ் அதிகாரி டி.ஜி.வன்ஸாரா முஸ்லிம்கள் மீதான துவேசத்தை கக்கும் கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
மும்பையில் 19 வயது இஷ்ரத் ஜஹான், கேரளாவைச் சார்ந்த ஜாவேத் ஷேக், வியாபாரி சொஹ்ரபுத்தீன் ஷேக், அவரது மனைவி கவுஸர்பீ ஆகியோரை போலி என்கவுண்டரில் வெறிப்பிடித்து கொலைச் செய்த வன்ஸாரா தற்பொழுது அஹ்மதாபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் வன்ஸாரா பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சிறையில் வைத்து முஸ்லிம்கள் மீது துவேசத்தை உமிழும் கவிதைகளை எழுதியது மூலம் வன்ஸாரா முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். சபர்மதி மத்திய சிறையில் சிறை அதிகாரிகள் ஏற்பாடுச்செய்த நிகழ்ச்சியில் கவிதைகளின் தொகுப்பு வெளியிடப்பட்டது.
நரேந்திரமோடிக்கு நெருங்கியவரான முன்னாள் டி.ஜி.பி சபீர் கண்டவவாலா வன்ஸாராவின் விஷம கவிதைகளின் தொகுப்பை வெளியிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய வன்ஸாரா, கண்டவவாலாவை புகழ்ந்து தள்ளினார். 270 கவிதைகள் அடங்கிய நூலில் சச்சின் டெண்டுல்கர், அன்னா ஹசாரே, உஸாமா பின் லேடன், ஜூலை 26 குண்டுவெடிப்பு, அஜ்மல் கஸாப் ஆகிய விஷயங்கள் அடங்கியுள்ளன.
“வஹ்ஹாபிகளின் பிள்ளைகளை கொடூரமாக கொலைச் செய்யுங்கள். ஜிஹாதிகளை ஒடுக்குங்கள். ஜின்னா ஒரு ஜிஹாதி, அவருடைய பாட்டுக்களை பாடக்கூடாது, சிந்து நதியின் வழியாக அவர்களை நாடுகடத்துங்கள்” என செல்கிறது முஸ்லிம்களுக்கு எதிரான கவிதையின் வரிகள்.
வன்ஸாராவின் துவேஷமான கவிதைகளுக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்துள்ளது. ’கண்டவ வாலா குஜராத் முஸ்லிம்களுக்கு அவமானம்’ என்று சமூக ஆர்வலரும், 2002 முஸ்லிம் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவருமான டாக்டர்.ஜெ.எஸ்.பந்தூக் வாலா கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “மோடியின் அன்பை பெற வன்ஸாரா, 15 முஸ்லிம் அப்பாவிகளை போலி என்கவுண்டர் மூலம் கொலைச் செய்துள்ளதை கண்டவவாலா மறந்துவிட்டார். கவுஸர்பீயை கொலைச் செய்யும் முன்பு பாலியல் வன்புணர்வுச் செய்யப்பட்டார். இத்தகைய நபரை கண்டவவாலா கெளரவப்படுத்தியுள்ளார்” என்று பந்தூக் வாலா குற்றம் சாட்டுகிறார்.
No comments:
Post a Comment