Sunday, March 18, 2012

பங்களாதேஷ் போரில் இந்தியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்யவில்லை: ஹென்றி கிசிஞ்சர்!


Henry Kissinger a former foe who now roots for India
புதுடெல்லி:1971-ஆம் ஆண்டில் பங்களாதேஷை விடுவிப்பதற்கான போரில் பாகிஸ்தானை தாக்குவதை தடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா ரகசிய ஒப்பந்தம் செய்யவில்லை என்று அமெரிக்காவின் முன்னாள் ஸ்டேட் செகரட்டரி ஹென்றி கிசிஞ்சர் கூறினார்.
டெல்லியில் இந்தியாடுடே கான்க்ளேவில் கலந்துகொண்டு உரையாற்றினார் அவர். ‘இந்தியாவும், சோவியத் யூனியனும் கூட்டணிக்கு ஒப்பான நல்லிணக்கத்துடன் செயல்பட்டன. ஆகையால் பாகிஸ்தானை பாதுகாப்பது அமெரிக்காவின் தேசிய விருப்பமாக அமைந்தது. ஒவ்வொரு நாடுகளும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட்டனர். அதற்கான கால அவகாசமே கிடைத்தது.’ என்று கிசிஞ்சர் கூறினார்.
நோபல் பரிசை பெற்றுள்ள கிசிஞ்சர் அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியவர் ஆவார்.
இந்திரா காந்தியை அக்காலக்கட்டத்தில் கிசிஞ்சர் ‘கிழவியான துர்க்குணம் கொண்ட மந்திரவாதி’ என்று வர்ணித்திருந்தார். இதுக்குறித்த வெள்ளை மாளிகை ஆவணங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இத்தகைய விமர்சனங்கள் அக்காலக்கட்டத்தின் உணர்வுகளின் வெளிப்பாடாக கருதினால் மட்டும் போது என்று கிசிஞ்சர் கூறினார்.
மிகவும் துணிச்சலும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட நபராக இந்திராகாந்தி திகழ்ந்தார் என்று கிசிஞ்சர் கூறினார்.
அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்த ரிச்சார்ட் நிக்ஸனை சீனாவுடன் நெருங்கச் செய்தது  உள்பட பல்வேறு நிர்ணாயக தூதரக உறவுகளின் மூலம் பிரசித்திப் பெற்ற கிசிஞ்சர் வரும் ஆண்டுகளில் ஆசியா முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார சக்தியாக மாறும் என்று தெரிவித்தார். இந்தியாவும், சீனாவும், ரஷ்யாவும் எதிர்காலத்தில் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment