
துனீஸ்:எதிர்ப்பாளர்களை கொலைச் செய்யும் சிரியாவின் அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் அரசு மீது புதிய தடையை விதிக்க வேண்டும் என்றும், தாக்குதலை உடனடியாக நிறுத்தவும் துனீசியாவில் நடைபெற சர்வதேச மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நாவுக்கும்,சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட அனுமதி அளிக்கவேண்டும். சிரியா அரசு தலைவர்களுக்கு பயண தடை, சொத்து முடக்கம், எண்ணெய் வாங்குவதை ரத்துச்செய்தல், தூதரக உறவை குறைத்தல், ஆயுதம் வாங்குவதை தடுப்பது ஆகிய நடவடிக்கைகளை சிரியா அரசு மீது எடுக்கவேண்டும் என்று மாநாடு கோரிக்கை விடுத்தது.
எதிர்கட்சியான சிரியா தேசிய குழுவை நாட்டின் அதிகாரப்பூர்வ கட்சியாக பகுதி அளவில் அங்கீகரிக்க முடிவு எடுக்கப்பட்டது. 70 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாநாட்டில் ரஷ்யாவும், சீனாவும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன.
சிரியாவுடனான அணுகுமுறையில் 2 நாடுகளும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்று மாநாட்டை துவக்கி வைத்த ஹிலாரி கிளிண்டன் கோரிக்கை விடுத்தார். ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்க யூனியன், அரபு லீக் நாடுகள் இம்மாநாட்டில் பங்கேற்றன.
இதனிடையே ஹும்ஸில் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்ட 27 பேரை செஞ்சிலுவை சங்கத்தினர் மீட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிட்சையளிக்க அவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment