
இஸ்லாமாபாத்:அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் தாலிபான் தலைவர்கள் கொலை அல்லது கைது செய்யப்படுகின்றார்கள் என்று ஆஃப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய் கூறியுள்ளார்.
ஜம்யத்துல் உலமாயே இஸ்லாமியின் தலைவர் மவ்லானா ஸமீஉல் ஹக்குடன் உரையாடும் வேளையில் கர்ஸாய் இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் தாலிபான் தலைவர்களுக்கும் இதைப் போன்றதொரு அனுபவம் ஏற்படுகிறது. இத்தகைய தலைவர்கள் காணாமல் போவதால் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் இழக்கப்படுகின்றன. அண்மை சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் தலைவர்களின் அணுகுமுறையில் நல்லதொரு மாற்றம் தென்பட்டதாக கர்ஸாய் கூறினார் என்று மவ்லானா ஸமீஉல் ஹக் தெரிவித்துள்ளார். அதேவேளையில், அமெரிக்காவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை பாகிஸ்தான் மாற்றிக்கொள்ளாத வரை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் தலைவர்களுக்கு எவ்வித பங்கும் வகிக்க முடியாது என்று ஹக், கர்ஸாயிடம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment