புதுடெல்லி:‘‘பிரதமர் மோடி சாதாரண மனிதர்தான். ஆனால்,
விவசாயியையோ, ஏழைகளையோ, தொழிலாளர்களையோ கட்டிப்பிடிக்க மாட்டார்’’
என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்
கிண்டல் செய்துள்ளார். பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில், வெளிநாட்டு தலைவர்களை கட்டிப்பிடித்து வரவேற்பு
குறித்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதில் அளித்த பிரதமர், ‘‘எனக்கு பிரதமருக்கான நெறிமுறைகள் எதுவும் தெரியாது.
ஏனெனில், நான் சாதாரண
மனிதன்’’ என்று
தெரிவித்திருந்தார்.
இதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். சமீபத்தில் விவசாயிகள் டெல்லியில் பெரும் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் கடைசி வரையில் மோடி பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதை கருத்தில் கொண்டு ராகுல் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: தன்னை சாதாரண மனிதன் என்று மோடி கூறிக்கொள்கிறார். ஆனால், பணக்காரர்களை மட்டுமே அவர் கட்டித் தழுவுவார். இதில் என்ன உங்களுக்கு நிர்பந்தம் ஏற்பட்டது?
விவசாயிகள், தொழிலாளர்கள், ராணுவ வீரர்கள் ஆகியோரையும் கட்டிப்பிடிப்பது அவசியம். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார். வெளிநாட்டு தலைவர்களை பிரதமர் மோடி கட்டிப்பிடிப்பதை கிண்டல் செய்து ராகுல் சமீபத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment