Tuesday, January 23, 2018

பாகிஸ்தானை விட தரவரிசையில் பின்தங்கி 62வது இடத்தில் இந்தியா: இலங்கை, நேபாளத்தை விடவும் மோசம்



டாவோஸ்: பொருளாதார தர வரிசையில் இந்தியா 62வது இடத்தில் உள்ளதாக உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மக்களின் வாழ்க்கை தரம், சுற்றுச்சூழலை தாக்குப்பிடிக்கும் தன்மை, எதிர்கால தலைமுறைனரை கடன்களில் இருந்து பாதுகாப்பது உள்ளிட்டவைற்றை கருத்தில் கொண்டு, அனைத்து மேம்பாட்டு குறியீடு புள்ளி விவரங்களை வெளியிட்டது. இதில், இந்தியா 62வது இடத்தில் உள்ளது. ஆனால், வளரும் நாடுகள் பொருளாதாரத்தில் அண்டை நாடுகளான பாகிஸ்தான் (47வது இடம்), சீனா 26) என இந்தியாவை விட சிறப்பான இடங்களை பிடித்துள்ளன.  இதுபோல் இலங்கை (40), வங்க தேசம் (34), நேபாள் (22) ஆகிய அண்டை நாடுகளும், உகாண்டா, புருண்டி, கானா, உக்ரைன், இந்தோனேஷியா, ஈரான், தாய்லாந்து, மலேசியா ஆகியவையும் இந்தியாவை விட சிறப்பான இடங்களை வகிக்கின்றன.

 கடந்த ஆண்டு 79 வளரும் நாடுகளில் எடுக்கப்பட்ட தரவரிசையில் இந்தியா 60வது இடத்திலும் சீனா 15,பாகிஸ்தான் 52வது இடங்களில் இருந்தன. இந்த ஆண்டில் 103 நாடுகளில் வளரும் நாடுகள் பட்டியலில் 74, வளர்ந்த நாடுகள் பட்டியலில் 29 என சேர்க்கப்பட்டு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
 உலக அளவில் நார்வே முதலிடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து அயர்லாந்து, லக்ஸம்பர்க், சுவிட்சர்லாந்து, டென்மார்க் ஆகியவை உள்ளன. ஆஸ்திரேலியா (9), ஜி7 பொருளாதார நாடுகளில் ஜெர்மனி (12), கனடா (17), பிரான்ஸ் (18), இங்கிலாந்து (21), அமெரிக்கா (23), ஜப்பான் (24, இத்தாலி (27) இடங்களில் உள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு இன்று துவங்குகிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றுள்ளார். இந்நிலையில், இந்தியா பின்தங்கியுள்ள தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment