நாடு முழுவதும் தலித் மக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
மழைக்கால கூட்டத் தொடரின் 5-வது நாளான நேற்று மக்களவை, மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடியது. மக்களவையில் காஷ்மீர் கலவரம், ஆம் ஆத்மி எம்.பி. பகவந்த் மான் விவகாரம், விமானப் படை விமானம் மாயமானது ஆகியவை குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரச்சினை எழுப்பினர்.
மாயமான விமானம்
சென்னை விமானப்படைத் தளத்தில் இருந்து அந்தமான் சென்ற விமானப் படை விமானம் மாயமானது குறித்து மக்களவை யில் நேற்று கவலை தெரிவிக்கப் பட்டது.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியபோது, விமானம் மாயமானது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமார், மாய மான விமானத்தை தீவிரமாக தேடி வருகிறோம். காங்கிரஸின் கோரிக்கை குறித்து அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் தெரிவிக் கப்படும் என்று உறுதியளித்தார்.
தலித் மீதான தாக்குதல்
அண்மைக்காலமாக தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் வலியுறுத்தினர். பாஜக கூட்டணியைச் சேர்ந்த லோக் ஜன சக்தி கட்சி எம்.பி. சிராக் பாஸ்வான் மக்களவையில் பேசியதாவது: நாடு முழுவதும் 20 கோடி தலித் மக்கள் உள்ளனர். அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
அண்மையில் பிஹாரின் முசாபர் பூர் மாவட்டத்தில் 2 தலித் இளைஞர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதேபோல நாடு முழுவதும் தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் எம்.பி. ராமச்சந்திரன் பேசியபோது, கேரளாவில் கம்யூ னிஸ்ட் மூத்த தலைவரின் புகாரின் பேரில் 2 தலித் சகோதரிகள் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய் யப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார். இதற்கு அவையில் இருந்து கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
திரிணமூல் வெளிநடப்பு
தலித் மக்கள் தாக்கப்படுவது தொடர்பாக மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று குரல் எழுப்பினர். அந்த கட்சியின் மூத்த தலைவர் டெரக் ஓ பிரைன் இது தொடர்பாக சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மற்றொரு திரிணமூல் எம்.பி. சுகேந்து சேகர் ராய் பேசியபோது, நாடு முழுவதும் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது, ஆனால் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். அவர் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தலித்துகள் மீதான தாக்குதல் குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று திரிணமூல் எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத் தினர். ஆனால் அவையை வழி நடத்திய பி.ஜே. குரியன் அனுமதி மறுத்ததால் அவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் மத்திய அரசு கூறியபடி அனைத்து கிராமங் களுக்கும் மின் இணைப்பு வழங் கப்படவில்லை என்று சமாஜ்வாதி எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர். இதற்கு மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆட்சேபம் தெரிவித்தார். இந்த விவகாரத்தால் அமைச்சருக் கும் சமாஜ்வாதி எம்.பி.க்களும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இறுதியில் சமாஜ்வாதி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவை ஒத்திவைப்பு
ஆந்திராவுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் எம்.பி. ராம்சந்திர ராவ் மாநிலங்களவையில் தனிநபர் மசோதா கொண்டு வந்துள்ளார்.
இந்த மசோதா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பேசியபோது, ஆந்திராவுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துள்ளது. அதனால்தான் காங்கிரஸ் எம்.பி. மசோதாவை கொண்டு வந்துள் ளார். இதனை இப்போதே விவாதத் துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால் இந்த மசோதா ஆகஸ்ட் 5-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துச் கொள்ளப்படும் என்று அவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment