Friday, September 4, 2015

"ஒரு முஸ்லிம் சிறுவன் மூழ்கிச் சாகவில்லை, உலகின் மனிதாபிமானமே செத்திருக்கிறது"

03, 2015

(TM Media) கடலில் மூழ்கி இறந்த மூன்று வயது முஸ்லிம் சிறுவனின் உடல் துருக்கியில் கரை ஒதுங்கியது. அந்த முஸ்லிம் சிறுவனின் மரணம் உலகின் மனசாட்சியையே உலுக்கி இருக்கிறது.20 நாடுகளின் மாநாடு ஒன்று துருக்கியில் நடந்து வருகிறது அந்த மாநாட்டில் கலந்து வெளியில் வரும் போது துருக்கி அதிபர் ரஜப் எர்துகான், செய்தியாளர்களை சந்தித்தார்செய்தியாளர்கள் சந்திப்பில் சிரிய சிறுவனின் மரணத்திற்கு ஐரோப்பிய நாடுகளே காரணம் என்று கடுமையாக ஐரோப்பிய நாடுகளை தாக்கினார்.ஒரு முஸ்லிம் சிறுவன் மூழ்கி சாகவில்லை உலகின் மனிதாபிமானமே செத்திருக்கிறது என்று கடுமையான வார்த்தைகளில் விமர்ச்சனங்களை அவர் பதிவு செய்தார்.மத்திய தரை கடலை ஐரோப்பிய நாடுகள் அகதிகளின் மண்ணறையைாக மாற்றிவருகிறது. ஐரோப்பிய நாடுகளின் அலட்சியத்தால் தான் கடலில் அகதிகள் மூழ்கி இறந்து வருகின்றனர் என கூறிய துருக்கி அதிபர்.ஐரோப்பிய நாடுகள் மனித நேயத்திர்க்கும் மத சாயம் பூசுகின்றன என் ஐரோப்பிய நாடுகளை கடுமையாக கண்டித்தார்.துருக்கியில் 20 இலட்சம் சிரிய அகதிகள் உள்ளனர் என்றும் எங்களை நாடிவரகுடிய எவரையும் நாங்கள் விரட்ட மாட்டோம் என்று கூறிய அவர் முஸ்லிம்கள் பலர்களின் மரணத்திர்கு காரணமாக உள்ள ஐரோப்பிய நாடுகள் அதர்கு உரிய விலையை கொடுத்தாக வேண்டிய காலம் வரும் என்றும் அவர் ஐரோப்பிய நாடுகளை எச்சரித்தார்

No comments:

Post a Comment