மும்பை - மும்பையில் இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு இடைக்காலத் தடை விதித்து மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 17 ஆம் திகதி இறைச்சி விற்பனைக்கு மும்பை மாநகராட்சி தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து ஆட்டு இறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் அனுப் மோத்தா, அஜ்மத் சயாத் இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
இறைச்சி விற்பனையை 2 நாட்களுக்கு தடைசெய்வது தொடர்பாக 2004 ஆம் ஆண்டு மகாராஷ்டிர அரசு விதிகளை நிர்ணயித்த போதிலும், இதுவரை அதனைப் பின்பற்றாமல் தற்போது திடீரென நான்கு நாட்கள் விதித்திருப்பது ஏன் எனக் கேள்வி கேட்டுள்ள நீதிபதிகள், ஜைன மதத்தினருக்காக மீன்கள் மற்றும் முட்டைகளுக்கு ஏன் தடை விதிக்கவில்லை என்றும் கேட்டுள்ளனர்.
No comments:
Post a Comment