Monday, September 28, 2015

மெக்கா நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்வு

மினா,  

மெக்கா நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில் கடந்த 24–ந்தேதி, ஹஜ் பயணத்தில் பயங்கர நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பல்வேறு நாடுகளை சேர்ந்த 700–க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த 25 ஆண்டுகளில் நடந்த இந்த மிகப்பெரும் விபத்தில், தமிழர்கள் உள்பட 10–க்கும் மேற்பட்ட இந்தியர்களும் பலியாகியதாக தகவல் வெளியானது. அங்கு பலியான இந்தியர்களின் விவரம் குறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள ஹஜ் தூதரகமும் விசாரணை நடத்தி வந்தது. 

இதில் ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் மற்றும் கேரளாவில் இருந்தும் சில பயணிகள் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அந்தவகையில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 35 ஆக உயர்ந்ததாக நேற்றுதெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே மெக்கா நெரிசலில் சிக்கி பலியானோரின் மொத்த எண்ணிக்கை 769–ஐ எட்டியது. மேலும் 934 பேர் காயமடைந்திருப்பதாகவும் சவுதி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

தற்போது மெக்கா நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்களில் மேலும் 10 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளனர் என்றும் இதில் தமிழகத்தை சேர்ந்தவர் ஒருவர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து நெரிசலில் சிக்கி பலியான தமிழர்களின் எண்ணிக்கையானது 4 ஆக உயர்ந்து உள்ளது. ஜெட்டாவில் உள்ள ஹஜ் தூதரகம், மேற்கு வங்காளத்தை சேர்ந்த மூன்று பேரும், கேரளா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தலா இரண்டு பேரும், மராட்டியம் மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவர் என்றும் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். என்று தெரிவித்து உள்ளது. 
 
36 பாகிஸ்தானியர்கள் பலி

மெக்கா நெரிசலில் சிக்கி பலியான பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கையானது 36 ஆக உயர்ந்தது. நெருக்கடி சம்பவத்தை அடுத்து சுமார் 85 பாகிஸ்தான் பயணிகளை காணவில்லை என்றும் தெரியவந்து உள்ளது. தொடர்ந்து அவர்களை காண்பதற்கான பணியும் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.,

No comments:

Post a Comment