Sunday, August 30, 2015

மீண்டும் சுடு காடாக மாறுகிறது சிரியா. இது ஒரு மறக்கப்பட்ட/மறைக்கப்பட்ட மனித இனத்தின் அலறல்....



மீண்டும் சுடு காடாக மாறுகிறது சிரியா. இது ஒரு மறக்கப்பட்ட/மறைக்கப்பட்ட மனித இனத்தின் அலறல்....
கொடுங்கோள் ஆட்சியாளன் Basher Al-Assad மீண்டும் தனது கொடுங்கோள் ஆட்சியை சிரியாவில் ஆரம்பித்து விட்டான். ‪#‎Saudi‬ ‪#‎Iran‬‪#‎ISIS‬ ‪#‎Hizbullah‬ போன்ற பெயர் தாங்கி முஸ்லிம் நாடுகளின்/இயக்கங்களின் உதவியுடன் சிரியா பொது மக்களைக் கொன்று குவிக்கும் வேட்டை தொடரப்பட்டு விட்டது. தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் சிரியாவை விட்டு, எங்கே போவதென்று தெரியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கின்றனர்.
தமது அண்டைய நாடுகள் எவ்வித உதவியும் செய்யாததால், கப்பல்கள் மூலமாக ஐரோப்பிய நாடுகளை வந்தடைய எத்தனித்த வேளை, நேற்று நூற்றுக்கும் அதிகமான சிரிய மக்கள் தமது உயிரை நடுக் கடலில் இழந்துவிட்டு, அவர்களின் இறந்த உடல்கள் கரையொதுங்கிய சம்பவம் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதே போன்று சிரியாவிலிருந்து தரைமார்க்கமாக ஒரு லாரியில் Austria நோக்கிச் சென்ற 71 சிரியர்கள், பசிக்கொடுமையாலும் சன நெருக்கடியாலும் தமது உயிரை விட்ட சம்பவம் செய்திகளின் ஊடாக அறியக் கிடைத்தது. இவ்வாறு பல்வேறுபட்ட, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பல இன்னல்களையும் துன்பங்களையும் அம்மக்கள் தினம் தினம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
மனித உரிமைகள் பேசித்திரியும் அமைப்புக்களான ‪#‎UN‬ , ‪#‎UNESCO‬போன்ற அமைப்புக்கள் இந்த விடயத்தில் மௌனம் காப்பது இங்கே கேள்விக்குரியாக மாறியிருக்கிறது. இவர்கள் முஸ்லிம்கள் என்பதால் தான் அவர்களின் இந்த மௌனத்திற்க்கான காரணமா? மனிதனை மனிதன் மதிக்காத ஒரு காலத்தில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதையிட்டு வெட்கித்தலை குணிகிறேன்.
இவ்விடயம் கட்டாயம் பேசப்பட வேண்டும். இது இன்று காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது. எம்சமூகத்தின் மத்தியிலும், பிற சமூகங்களின் மத்தியிலும் இதன் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட வேண்டும். முடிந்த அளவு உங்கள் ஆக்கங்களையும் சிரியா முஸ்லிம்கள் என்பதை விட, சிரியா மனித இனத்திற்க்காக எழுப்புங்கள்/எழுதுங்கள். என்னால் முடியுமான வரை தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஆக்கங்களையும் பதிவுகளையும் பிரசுரிக்கிறேன் இன் ஷா அல்லாஹ்...

No comments:

Post a Comment