
மகா(ஹிந்து)ராஷ்டிரத்தில் முஸ்லிம்களின் அவல நிலை : பள்ளிக்கூடத்தில் இடமில்லை !
மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக-சிவசேனை கூட்டணி ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து முஸ்லிம்கள் கருவருக்கப்படும் நிலை தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.
'மாட்டிறைச்சி' தடை செய்யப்பட்டதால், அது தொடர்பான தொழில் செய்துவந்த சுமார் 20 லட்சம் முஸ்லிம்கள் ஒரே இரவில் வேலை வாய்ப்புக்களை இழந்தனர்.
'MBA' பட்டதாரி வாலிபருக்கு முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக வேலை மறுக்கப்பட்டது.
குடியிருந்த வீட்டை 24 மணி நேரத்தில் காலி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார், ஒரு முஸ்லிம் பெண்மணி.
தற்போது, பள்ளிக்கூடம் ஒன்றில் முஸ்லிம் மாணவர்களுக்கு ஒட்டுமொத்தமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியாவது :
மும்பையின் 'ஏரோலி' பகுதியில் 'CBSE' பாட திட்டத்தின்படிசெயல்படும் 'நியூ ஹாரிசான் ஸ்கூல்' என்ற தனியார் பள்ளியில், 80% முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட 'மும்பரா' பகுதியின் ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் சேர்க்கை மறுக்கப்பட்டுள்ளது.
தங்கள் பகுதியில் 'CBSE' பாட திட்டத்தை செயல்படுத்தும் சரியான பள்ளிகள் இல்லை என்ற காரணத்தால், 'மும்பரா'விலிருந்து சுமார் 23 கி மீ தூரத்தில் 'ஏரோலி'யில் உள்ள 'நியூ ஹாரிசான் ஸ்கூல்' என்ற பள்ளியில் நூற்றுக்கான பிள்ளைகளை முஸ்லிம்கள் சேர்த்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளாக அங்கு பயின்றுவரும் முஸ்லிம் மாணவர்கள், இவ்வருடம் வெளியான தேர்வு முடிவுகளில் பிரம்மிக்கத்தக்க வகையில் மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர்.
இந்நிலையில், மேற்படி 'நியூ ஹாரிசான் ஸ்கூல்' நிர்வாகம், ஒட்டுமொத்த 'மும்பரா' பகுதியையும் 'ப்ளாக் லிஸ்டில்' வைத்துள்ளதாக கூறி, இவ்வருடம் முஸ்லிம் மாணவர்களை சேர்க்க மறுக்கிறது.
இதற்கு பள்ளியின் தரப்பில் கூறப்படும் காரணம் :
'மும்பரா' மாணவர்கள் பிரச்சினைக்குரிய மாணவர்களாக உள்ளனர், பள்ளி வாகன டிரைவர் மற்றும் கிளீனருக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர், போன்ற 'சப்பைக்கட்டு' காரணங்களை கூறியுள்ளது.
9 லட்சம் மக்கள் வசிக்கும் 'மும்பரா' டவுன்ஷிப் முழுவதையும் ஒரு பள்ளிக்கூடம் பிளாக் லிஸ்டில் வைக்க முடியுமா? என்ற கேள்விகளுடன் மாணவர்களின் பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு வருகின்றனர்
No comments:
Post a Comment