ரியாத்தில் நேற்று(01\03\15) நடந்த கிங் பைசல் விருது வழங்கும் விழாவில் சவூதி மன்னர் சல்மான் இப்னு அப்துல் அஜிஸ் அவர்கள் இந்தியாவை சேர்ந்த DR ஜாகிர் நாயக்கிற்கு விருது வழங்கினார்.
24 கேரட் 200 கிராம் தங்க பதக்கம், சவூதி ரியால் 750,000(இந்திய மதிப்பில் ஒரு கோடி 21 லட்சம் 50 ஆயிரம் தோராயமாக) மற்றும் அரபியில் எழுதப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது.
DR ஜாகிர் நாயக் (Islamic Research Foundation) இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவி முஸ்லிம்கள் மற்றும் மாற்றுமத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைக்கும் பணியை செய்து வருகிறார். Peace TV யை நிறுவி அதன் மூலம் உலக முழுக்க இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ளும்படி சேவை செய்து வருகிறார்.
DR ஜாகிர் நாயக் விழாவில் பேசும்போது இஸ்லாம் மட்டுமே முழு உலகத்திற்கும் அமைதியை கொண்டுவர முடியும் மற்றும் தான் பெற்ற ஒரு கோடி 21 லட்சம் 50 ஆயிரம் Peace TV க்கு வக்பு சொத்தாக வழங்குகிறேன் என்றார்.

No comments:
Post a Comment