Sunday, February 15, 2015

இராக்கின் அல் பாக்தாதி நகரத்தை கைப்பற்றிய ஐஎஸ் தீவிரவாதிகள்: அமெரிக்க படைக்கு பின்னடைவு

இராக்கில் அல் பாக்தாதி என்ற நகரை ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றிவிட்டனர் என்று அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது.
சிரியாவில் இஸ்லாமிய நாட்டை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் ஐஎஸ் தீவிரவாதிகள், இராக்கிலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாட்டுப் படைகள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் இராக் பாதுகாப்புப் படையினருக்கு அமெரிக்க வீரர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இராக்கின் மேற்குப் பகுதியில் உள்ள அன்பார் மாகாணம், அல் ஆசாத் விமானப் படை தளத்தில் 300-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் முகாமிட்டு, இராக் வீரர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த முகாமில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள அல் பாக்தாதி நகரை ஐஎஸ் தீவிரவாதிகள் சில நாட்களுக்கு முன்னர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் அட்மிரல் ஜான் கிர்பி நேற்று உறுதிப்படுத்தினார்.
ஆனால், ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றிய நகரில் இருந்து சில கி.மீ. தொலைவில் அமெரிக்க வீரர்கள் 300 பேர் சிக்கி கொண்டுள் ளனர். தீவிரவாதிகள் பயங்கர தாக் குதல் நடத்தி வருகின்றனர் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும் இதை பென்டகன் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இதுகுறித்து ஜான் கிர்பி கூறுகையில், ‘‘இராக் ராணுவ உடை அணிந்த 25 தீவிரவாதிகள் நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதற்கு இராக் வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். அவர்கள் அனை வரும் குண்டுவெடிப்பில் பலியாகி உள்ளனர். ஐஎஸ் தீவிரவாதி களுடன் அமெரிக்க வீரர்கள் நேரடி யாக மோதவில்லை. அவர்களை இராக் வீரர்களே சமாளித்து வருகின்றனர்’’ என்றார்.
சன்னி பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் அல் பாக்தாதி நகரம், இராக் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. இப்போது ஐஎஸ் தீவிரவாதிகள் பிடித்துள்ளதால், அமெரிக்க படைகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment