சம்பைப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துகளை தடுக்க இணைப்பு சாலைகளில் வேகத்தடை அமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் வழியாக கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை செல்கிறது. இந்த சாலை களில் வாகனங்கள் அனை த்தும் நேரத்தை கணக்கில் கொண்டு 120 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கின்றன. இதனால் சேதுபாவாசத்திரம் பகுதி யில் மட்டும் தினம்தோறும் விபத்துகள் நடக்கிறது.
சேதுபாவாசத்திரம் கொள்ளுக்காடு துவங்கி கட்டுமாவடி கணேசபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலை யின் இருபுறங்களிலும் 100க்கும் மேற்பட்ட இணைப்பு சாலைகள் கிராமப்புறங்களிலிருந்து வந்து சேர்கிறது. இந்த சாலைகள் இணையும் இடங்களில் அவரவர் பட்டா நிலம் உள் ளது. இதனால் கிழக்கு கடற் கரை சாலையில் வரும் வாகனங்கள் தெரியாதவாறு கட்டிடங்களை கட்டி கடை தொழிலும், வீடுகளில் குடியிருந்தும் வருகின்றனர். இதுவரை இந்த பகுதிகளில் விபத்துகளால் 20க்கும் மேற்பட்ட உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இணை ப்பு சாலைகள் அனைத் திலும் உள்ள வேலிகருவை மரங்கள் மற் றும் ஆக்கிரமிப்புகளை அக ற்றி அனைத்து சாலைகளி லும் வேகத்தடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி சேதுபாவாசத்திரம் பாவா கூறும்போது, இணைப்பு சாலைகளின் இருபுறங்களி லும் வேலி கருவை மரங் கள் வளர்ந்து மூடியுள்ளதால் வளைவுகளில் வரும் வாகனங்களும், இணைப்பு சாலைகளில் இருந்து வந்து சேரும் வாகனங்களும் தெரியாமல் விபத்துகள் ஏற்படுகிறது என்றார். சேதுபாவாசத்திரம் ஜெயக்குமார் கூறும் போது, கடந்த காலங்களில் பிள்ளையார்திடல், காரங்குடா முக் கம், விளங்குளம் இணைப்புச்சாலை போன்ற பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்க பெற்று தடுப்பு இரும்பு கேட்டுகள் வைக்கப்பட்டு வாகனங்களின் வேகங்கள் குறைக்கப்பட்டு விபத்துகள் நடப்பது தடுக்கப்பட்டது. மீண்டும் தடுப்பு கேட்டுகள் அமைத்து ஆங்காங்கே வேகத்தை குறைத்து செல்லு மாறு விளம்பர பலகைகள் வைக்க வேண்டும் என்றார்.சம்பைப்பட்டிணம் சாதிக்பாட்சா கூறும் போது, சாலை ஓரங்களில் உள்ள வேலிக்கருவை மரங்களை ஒவ்வொரு ஊராட்சியிலும் 100 நாள் வேலைத்திட்ட பணியிலாவது அப்புறப்படுத்த வேண்டும். அப்போது தான் கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்படும் விபத்துகளை தடுக்க முடியும் என்றார்.

No comments:
Post a Comment