ஜெர்மனியின் பிரபல கால் பந்தாட்ட வீரர் டேன்னி ப்ளம் இஸ்லாத்தை தழுவினார்.....!!
இந்தியாவில் இஸ்லாத்தை அழிப்பதற்காக துவங்கப்பட்ட RSS ஐ போன்று ஜெர்மனியில் தொடங்கப்பட்ட இயக்கமே பெகிடா என்ற அமைப்பு. இஸ்லாத்திற்கு எதிராக வியூகங்களை அமைத்து அங்கிருந்து இஸ்லாத்தை முற்றாக துடைக்க அரும்பாடு பட்டு வருகிறது.
ஆனால் இஸ்லாம் ஜெர்மனி மக்களை தன் வசம் ஈர்த்து வருகிறது. அரேபியாவில் புறப்பட்ட இஸ்லாமிய மார்க்கம் ஆசியா கண்டத்தை ஆக்கிரமித்து பின் ஐரோப்பாவையும் அசுர வேகத்தில் ஈர்த்து வருவதை தினம் தினம் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில்....
இறைவனின் மாபெரும் கிருபையினால் ஜெர்மன் நாட்டின் பிரபல கால்பந்தாட்ட வீரர் டேன்னி ப்ளம் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
தனது மன மாற்றத்தைப் பற்றி டேன்னி ப்ளம் கூறும் போது...
இந்த உலகில் அனைத்து செல்வங்களும் நம்மை விட்டு சென்று விடும். பணம், பெண், வாகனம், வீடு இவை எல்லாம் ஒரு நாள் நம்மை விட்டு சென்று விடும். இந்த செல்வங்கள் அனைத்தும் இருந்தும் மன அமைதி மட்டும் எனக்கு கிடைக்கவில்லை.
மன உளைச்சலில் இருந்த எனக்கு இஸ்லாமில் தீர்வு கிடைத்தது. நமது வாழ்வின் அனைத்திலும் ஒரு விதமான மகிழ்ச்சி கிடைக்கும் வழி ஒன்று உண்டென்றால் அது நம்மை படைத்த இறைவனிடம் முழுமையாக விழுந்து விடுவதுதான். இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் என்கிறார்.
சத்தியத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...
German footballer Danny Blum converted to Islam

No comments:
Post a Comment