அன்பு சகோதரர்களே.... ஒரு குடும்பத்தின் கண்ணீரை துடைக்க உதவிடுவீர்...
இந்த புகை படத்தில் உள்ள சகோதரர் அப்துல் ரஹ்மான் தஞ்சை மாவட்டம் பேராவூரனியை அடுத்த நாட்டாணிக்கோட்டை என்ற கிராமத்தை சார்ந்தவர். அவர் தன் குடும்ப சூழ்நிலையின் காரணமாக 05-07 -2013 அன்று தாயகத்திலிருந்து கத்தார் நாட்டிற்க்கு வீட்டு வேலைக்கு சென்றார் அவர் சென்ற சில நாட்களிலேயே அந்த முதலாளி கொடுமை செய்வதாக தன் மனைவியிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
அதன் பின் அங்கிருந்து சவுது அரேபியாவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல மாதங்களாக அவர் குடும்பத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் எங்குஇருக்கிறார் என்று தெரியாமல் உள்ளது. சவுதியி எந்த இடத்தில் இருக்கிறார் என்பதும் தகவல் இல்லை. இவரது மணைவி இரன்டு பெண் குழந்தைகளுடன் மிகவும் வறுமைநிலையில் வாடிவருகிறார். அவர் தற்போது பேராவூரணி தமுமுக கிளை நிர்வாகிகளுக்கு மனு கொடுத்து தன் கணவரை மீட்டு தருமாறு கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நல் உள்ளம் கொண்ட உறவுகளே... இவரை பற்றி விசாரியுங்கள் தகவல் கிடைத்தால் அந்த குடும்பத்தின் கண்ணீர் துடைக்கப்படும்...
அல்லாஹ் அருள் புரிவானாக...





No comments:
Post a Comment