Monday, January 26, 2015

பேராவூரணி பகுதியில் இந்திய முஸ்லிம் லீக் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியில் இந்திய முஸ்லிம் லீக் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சை தெற்கு மாவட்ட இந்திய முஸ்லிம் லீக்கின் நிர்வாகிகள் வெள்ளிகள்தோறும் பள்ளி பயணம் என்ற பெயரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேராவூரணி, நாடங்காடு, ஒட்டங்காடு, துறவிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர உறுப்பினர் சேர்க்கை மாநில துணை தலைவர் நஸ்ருதீன் தலைமையில் நடைபெற்றது. அங்குள்ள பள்ளிகளில் முஸ்லிம் லீக்கின் நிர்வாகிகள் ஜூம்மா பேரூரை நிகழ்த்தினார்.
ஏராளமான இளைஞர்கள் இந்திய முஸ்லிம் லீக்கில் உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர்.
முகாமில் மாநில இளைஞரணி துணைச் செயலர் வழக்குரைஞர் முனாஃப், மாவட்ட துணைத் தலைவர் ஹமீது மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment