Friday, March 14, 2014

துருக்கியில் ஃபத்ஹுல்லாஹ் குலனின் பள்ளிக்கூடங்களை மூட அதிபர் அனுமதி!

news-graphics-2007-_644088a
அங்காரா: ஃபத்ஹுல்லாஹ் குலனின் பணிகளுக்கு பொருளாதார பின்னணியாக கருதப்படும் ஹிஸ்மத் இயக்கத்தின் பள்ளிக்கூடங்களை தீர்மானித்த துருக்கி பாராளுமன்ற நடவடிக்கைக்கு அதிபர் அப்துல்லாஹ் குல் அங்கீகாரம் அளித்துள்ளார். அரசை கவிழ்க்க குலன் முயற்சிப்பதாக ஏற்கனவே பிரதமர் எர்துகான் குற்றம் சாட்டியிருந்தார்.
போலீஸ் மற்றும் நீதிபீடத்தில் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ள குலனின் ஆதரவாளர்கள் சமமான அரசை உருவாக்க முயற்சிப்பதாகவும், எர்துகானுக்கு எதிரான நடவடிக்கைகள் நடப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அரசு குற்றம் சாட்டியது.
ஹிஸ்மத் பள்ளிக்கூடங்களை மூட அரசு தீர்மானித்த பிறகு எர்துகான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அடுத்த ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு முன்பாக பள்ளிக்கூடங்களை மூட கடந்த வாரம் பாராளுமன்றம் தீர்மானித்தது.

No comments:

Post a Comment