
மதுரை: மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள சுங்கம் பள்ளிவாசல் முன்பு குண்டு வெடித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்பேட்டை பகுதியில் உள்ள சுங்கம் பள்ளிவாசல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பள்ளிவாசல் நிர்வாகியான காஜா மைதீன் என்பவரது இருசக்கர வாகனத்தின் அடிப்பகுதியில் சணல் வெடிகுண்டு வெடித்தது. அங்கு சென்று பார்த்தபோது சணல் சுற்றிய பட்டாசு துண்டுகள் வெடித்து சிதறியது கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன் முஸ்லிம் வழக்கறிஞர் ஒருவரின் காருக்கு அடியில் இதுபோன்ற குண்டு வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment