ஸ்ரீநகர்: கஷ்மீரில் சாதாரண மக்கள் 7 பேரை பாதுகாப்பு படையினர் அநியாயமாகசுட்டுக்கொன்றதாக குற்றம் சாட்டி கிராமமக்கள் காவல் நிலையத்தை தாக்கமுயன்றனர்.
குப்வாரா மாவட்டத்தில் கிளர்ச்சிக்காரர்களெனக் கருதப்படும் ஏழு பேரை துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொன்றதாக பாதுகாப்புப் படைகள்கூறியிருந்தனர்.இதனை மறுத்த கிராம மக்கள் சாதாரண மக்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொலைச் செய்ததாக குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமடைந்த மக்கள் காவல் நிலையம் ஒன்றை தாக்க முயன்றபோது போலீஸார், ரப்பர் தோட்டாக்களால் சுட்டும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைத்துள்ளனர்.ஆர்ப்பாட்டத்தின்போது கஷ்மீருக்கு சுதந்திரம் வேண்டும் என்று கோஷமிட்ட கூட்டத்தார், கொன்றது யார் யாரை என்று அதிகாரிகள் அடையாளம் காட்ட வேண்டும் என்று கோரினர்.
No comments:
Post a Comment