Tuesday, February 25, 2014

முஸஃபர் நகர்: தேடப்படும் குற்றவாளிகளை பிடிக்க 84 போலீஸ் குழுக்கள்!


policeமுஸஃபர் நகர்: முஸஃபர் நகர் கலவரம் தொடர்பாக தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க 84 போலீஸ் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு போலீஸ் குழுவும் கெஸட்டட் ரேங்கில் உள்ள போலீஸ் அதிகாரிகள் அடங்கியது என்று மூத்த போலீஸ் சூப்பிரண்ட் ஹெச்.என்.சிங் தெரிவித்தார். முஸஃபர் நகர் மற்றும் அதன் சமீப பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக சங்க்பரிவார் சதித்திட்டம் தீட்டி நடத்திய வகுப்புக் கலவரத்தில் தொடர்புடைய 244 குற்றவாளிகள் போலீசிடம் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளனர். 220பேர் மீது கொலை, கொள்ளை, தீ வைப்பு ஆகிய வழக்குகள் பதிவுச்செய்யப்பட்டுள்ளன. ஆறு கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் 24 பேர்குற்றவாளிகள். குத்பா கிராமத்தில் கலவரம் தொடர்பான வழக்கில் 39 குற்றவாளிகளில் 2 பேர் மட்டுமே கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

இங்கு பெண் உள்பட எட்டு பேர் கொல்லப்பட்டு 24 பேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 24 குற்றவாளிகளில் 2 பேர் மட்டுமே கைதுச் செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை கைதுச் செய்ய கிராமங்களுக்குச் செல்லும் போலீஸை கிராமவாசிகள் தடுக்கின்றனர். தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் சொத்துக்களை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் பறிமுதல்ச் செய்யும் நீதிமன்ற நடவடிக்கை துவங்கியுள்ளது.

No comments:

Post a Comment