புதுடெல்லி: இந்திய உளவுப்பிரிவான ’ரா’வின் முன்னாள் தலைவர் சஞ்சீவ் திரிபாதி பா.ஜ.கவில் இணைந்துள்ளார்.அதிகாரப்பூர்வ பதவிகளை அலங்கரித்த பிறகு அண்மைக்காலமாக பா.ஜ.கவில் இணையும் நான்காவது நபர் திரிபாதி.1972-ஆம் ஆண்டு பாட்சில் ஐ.பி.எஸ் அதிகாரி திரிபாதி.
முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங், முன்னாள் பெட்ரோலியம் செகரட்டரி ஆர்.எஸ்.பாண்டே, இந்தியாவிற்கான ஐ.நாவில் முன்னாள் நிரந்தர பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் அண்மையில் சங்க்பரிவாரத்துடன் இணைந்தனர்.
அதிகார மட்டங்களில் காவிமயமாவது குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவதாக ஓய்வு பெறும் முக்கிய அதிகாரிகள் கூட்டத்தோடு பா.ஜ.கவில் இணைவது அமைந்துள்ளது.உத்தரபிரதேச மாநிலம் பரேலியைச் சார்ந்த திரிபாதி 2010 டிசம்பர் 30 முதல் 2012 டிசம்பர் 29 வரை ’ரா’வின் தலைவராக பணியாற்றினார்.
No comments:
Post a Comment