தோஹா: கத்தர் நாட்டின் தலை நகரான தோஹாவில் உள்ள உமர் பின் கத்தாப் மஸ்ஜிதில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரையில் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி அவர்கள், எகிப்தில் நடந்த ராணுவ சதிப்புரட்சிக்கு எதிராகவும், அதற்கு உதவி புரிந்த யு.ஏ.இ மற்றும் சவூதி அரேபியா நாடுகளை விமர்சித்தும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இதன் விளைவாக சவூதி மற்றும் யு.ஏ.இ நாடுகள், கர்ளாவி மீது கோபம் கொண்டதோடு கத்தருக்கு தங்கள் எதிர்ப்பையும் பதிவுச் செய்தன.யு.ஏ.இ அரசு தலை நகர் அபுதாபியில் கத்தர் நாட்டு தூதரை அழைத்து எதிர்ப்பு தெரிவித்தது.இதனைத்தொடர்ந்து ஷேக் கர்ளாவி அவர்கள் தனது உரையை மட்டுப்படுத்திக் கொள்வார் என
எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் 3 வாரங்களுக்கு பிறகு மீண்டும் ஜும்ஆ உரை நிகழ்த்திய ஷேக் கர்ளாவி, சவூதி மற்றும் யு.ஏ.இ நாடுகளை மீண்டும் விமர்சித்துள்ளார்.
எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் 3 வாரங்களுக்கு பிறகு மீண்டும் ஜும்ஆ உரை நிகழ்த்திய ஷேக் கர்ளாவி, சவூதி மற்றும் யு.ஏ.இ நாடுகளை மீண்டும் விமர்சித்துள்ளார்.
”நான் அவர்களைக் குறித்து(சவூதி, யு.ஏ.இ) இரண்டு வரிகள் கூறியதற்காக இவ்வளவு தூரம் கோபம் கொள்கின்றார்கள்.அவர்களின்
வரம்புமீறல்களையும், அக்கிரமங்களையும் குறித்து பேச ஒரு ஜும்ஆ உரையையே ஒதுக்கினால் நிலைமை என்னவாகும்?வெறும் சில வார்த்தைகளையே அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
வரம்புமீறல்களையும், அக்கிரமங்களையும் குறித்து பேச ஒரு ஜும்ஆ உரையையே ஒதுக்கினால் நிலைமை என்னவாகும்?வெறும் சில வார்த்தைகளையே அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
மக்களின் வருமானத்தில் இருந்து சேகரித்த பில்லியன் டாலர்களை, அதிபர் முர்ஸியை பதவியில் இருந்து வெளியேற்றி,ராணுவத்தை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு செலவழித்ததோடு ஆட்சியாளர்கள்(சவூதி, யு.ஏ.இ) நிறுத்தவில்லை.அவர்கள் சுதந்திரம், நீதி, ஜனநாயகத்திற்கான மக்களின் அனைத்து உரிமைகளையும் பறித்துள்ளனர்” என்று ஷேக் கர்ளாவி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment