Tuesday, February 25, 2014

மே.வங்காளம்:சி.பி.எம்மில் இருந்து விலகிய அப்துல் ரஸ்ஸாக் மொல்லா புதிய கட்சி துவங்கினார்!

கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியிலிருந்து(சி.பி.எம்) விலகிய அப்துல் ரஸ்ஸாக் மொல்லா புதிய கட்சி துவங்கியுள்ளார்.2016-ஆம் ஆண்டு தனது கட்சி மே.வங்க மாநிலத்தில் முதல் தலித் முதல் அமைச்சரையும், முதல் முஸ்லிம் துணை முதல் அமைச்சரையும் அளிக்கும் என்று மொல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இவர் மே.வங்க மாநிலத்தில் முன்னாள் சி.பி.எம் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவை கடுமையாக விமர்சித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கு காரணம் பட்டாச்சார்யாவின் கொள்கைகளே என்று அவர்
குறிப்பிட்டார்.
கட்சியில் இருந்து விலகி இருந்த அப்துல் ரஸ்ஸாக் மொல்லா, கடந்த சில காலமாக கட்டி கமிட்டிக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை.நேற்று அவர் ஏற்பாடுச் செய்த கூட்டத்தில் சி.பி.எம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான லட்சுமண் சேதும் கலந்துகொண்டார்.இவர் கட்சியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார்.

புதிய கட்சி துவக்கியதுக் குறித்து மொல்லா கூறியது:
சி.பி.எம் தலைமை அசுத்தமடைந்துள்ளது.கடந்த 34 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோதும் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக எதுவும் செய்யவில்லை.சி.பி.எம்மின் பொலிட் பீரோ முதல் மாநில கமிட்டி வரை மாசு அடைந்துள்ளது என்று கூறிய மொல்லாவிடம், சி.பி.எம் கட்சியில் இருந்து விலகுவீர்களா? என்று கேள்வி எழுப்பியபோது,’அவர்கள் எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கட்டும்’ என்று பதிலளித்தார்.

No comments:

Post a Comment