முஹம்மது ஷாஹித் என்ற 2ஆம் ஆண்டு பட்டப்படிப்பை பயிலும் மாணவர் தாடியை நீளமாக வளர்த்தற்காக, இரண்டு தடவை உடல் பரிசோதனைச் செய்த பிறகே நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், அடையாள அட்டையை பரிசோதிக்கும் பொறுப்பை மட்டுமே தான் வகித்ததாகவும், பாதுகாப்பு பரிசோதனைகளை மாவட்ட நிர்வாகம் தான் நடத்தியது என்றும் பாதுகாப்பு கல்வி துறையில் பேராசிரியராகவும் பணியாற்றும் சுக்லா கூறியுள்ளார்.
இதன் காரணமாக வெளித்தோற்றம் மற்றும் மதத்தின் அடிப்படையிலான பாரபட்சத்திற்கு தான் இரையானதாக சுட்டிக்காட்டி தேசிய மனித உரிமை கமிஷன், தேசிய சிறுபான்மை கமிஷன், உ.பி மாநில முதல்வர், பல்கலைக்கழக துணை வேந்தர் ஆகியோருக்கு ஷாஹித் புகார் மனு அனுப்பியுள்ளார்.
லக்னோ பல்கலைக் கழக வார்டனாகவும் உள்ள சுக்லா, நிகழ்ச்சி முடிந்த அடுத்தநாள் ஷாஹித்தின் ஹாஸ்டல் தங்குமிடத்தையும் சோதனைக்கு உட்படுத்தியதாக ஷாஹித் குற்றம் சாட்டியுள்ளார்.
தனி நபர்களை மதத்தின் அடிப்படையில் வேறுபடுத்துவதை ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு போதும் எதிர்பாக்கவில்லை என்று சமூக ஆர்வலரும், மகசேசே விருதுப் பெற்றவருமான சந்தீப் பாண்டே தெரிவித்துள்ளார்.
ஷாஹித் மீதான இந்த அநீதிக்கு பல்வேறு மாணவர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment