மாவட்டத்திலுள்ள மசூதி ஒன்றின் மீது நேற்று இரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் வாழும் இந்த பகுதியில் உள்ள 'மஸ்ஜிதுல் பலாஹ்' என்ற மசூதி மீது நடைபெற்ற இந்த தாக்குதலால் இப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர்.
நேற்று இரவு வாகனமொன்றில் வந்த மர்ம நபர்கள் கற்களை வீசி இந்த மசூதி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு பௌத்த பிக்குமார்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் நேரில் சென்று பார்வையிட்டு மசூதி நிர்வாகத்திற்கு ஆறுதல் கூறினர்.
இது குறித்து விசாரனை மேற்கொண்டு வரும் காத்தான்குடி காவல்துறையினர் இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment