Saturday, January 18, 2014

ஆப்கானில் விரைவில் ஆட்சியை பிடிப்போம்!: தாலிபான்கள்

muhammed
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாங்கள் மிக விரைவில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்று தாலிபான்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.தாலிபான் செய்தி தொடர்பாளர் ஸைபுல்லாஹ் முஜாஹித் பி.பி.சியின் உலக விவகாரச் செய்திகளின் ஆசிரியர் ஜான் சிம்ப்ஸனிடம் கூறியது: இஸ்லாமியச் சட்டம் நிரந்தரமானது, அது அமல்படுத்தப்பட்டே ஆகவேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்களது அணுகு முறை கடுமையாக இருக்கும்.அதில் எந்த தளர்வும் இருக்காது.
எனினும் 2001 ஆம் ஆண்டு தாங்கள் பதவியிலிருந்து அகற்றப்படுவதற்கு முன்னர், ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த போது இருந்ததைவிட தங்களது நடவடிக்கையில் சில மாறுதல்கள் இருக்கும் ஆப்கானிஸ்தானின் பெரும்பாலானப் பகுதிகள் ஏற்கெனவே எமது கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆப்கானிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்களை,’போலித் தேர்தல்கள்’ எனக் கூறும் அந்தத் தாலிபான் செய்தி தொடர்பாளர், அதில் பங்குபெறும் எந்த அரசியல் தலைவர்களுடனும் தங்களுக்கு தொடர்புகள் இருக்காது என்றும் கூறுகிறார்.

No comments:

Post a Comment