சொத்துதகராறு வெடித்துள்ளது.கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயும், அவரது இளையசகோதரர் ஜெய்தேவும் மும்பை உயர்நீதிமன்றத்தில் சொத்துக்காக சட்டரீதியானபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பால்தாக்கரேக்கு சொந்தமாக கோடிக்கணக்கானரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.தனக்கு சாதகமாக தாக்கரே எழுதியதாக கூறப்படும் உயிலை நீதிமன்றத்தில்உத்தவ் தாக்கரே ஆஜர்படுத்தியுள்ளார்.உத்தவ் தாக்கரேவுக்காகநீதிமன்றத்தில் சட்ட நிறுவனமான கங்கா அண்ட் கம்பெனி ஆஜராகியுள்ளது.
ஆனால்,தாக்கரேயின் சொத்தில் எதுவும் கிடைக்காத ஜெய்தேவ், உயில் பத்திரம்குறித்து கேள்வி எழுப்பி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.இவ்வழக்குஇம்மாதம் 27-ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று கருதப்படுகிறது.உயிலைஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ நீதிமன்றம் கட்சிதாரர்களிடம் கோரும் எனகருதப்படுகிறது.தாக்கரேயின் உயிலின் படி சொத்துக்கள் மற்றும் வங்கிடெபாசிட்டுகளும் சேர்த்து 14.85 கோடி ரூபாய்மதிப்பாகும்.பால்தாக்கரேவுடன் முன்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தஜெய்தேவ், இந்த உயிலைக் குறித்து கேள்வி எழுப்புகிறார்.தாக்கரேயின்சொத்துக்கள் உயிலில் குறிப்பிட்டிருப்பதை விட அதிகமாகும் என்று ஜெய்தேவ்சுட்டிக்காட்டுகிறார்.சில ஆண்டுகளுக்கு முன்னர் தந்தையை விட்டுபிரிந்தாலும் நட்புறவை பேணுவதால் தனக்கு குடும்பத்தில் எதுவும்அனுமதிக்காமல் அவர் உயில் பத்திரம் எழுதமாட்டார் என்று ஜெய்தேவ்கூறுகிறார்.ஜெயதேவ் மற்றும் தாக்கரேயின் மரணித்த மூத்த மகன் பிஜுமாதவனின் மனைவி மாதவி ஆகியோருக்கு தாக்கரெ எதுவும் உயிலில் எழுதவில்லை.
No comments:
Post a Comment