Thursday, January 23, 2014

இஃக்வான் தொடர்பு: யு.ஏ.இ.யில் 30 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு!

அபூதபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் இஃக்வானுல் முஸ்லிமீனின் கிளையை துவக்க முயற்சித்ததாக குற்றம் சாட்டி 30 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
10 உள்நாட்டினர் மீதும், 20 எகிப்தியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என கருதப்படுகிறது.
குற்றச்சாட்டுகளை 30 பேரும் மறுத்துள்ளனர். சிறைத் தண்டனை முடிந்து எகிப்தியர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவர்.

No comments:

Post a Comment