கெய்ரோ: எகிப்திலுள்ள துருக்கித் தூதுவரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு அந்நாட்டு ராணுவ சர்வாதிகார அரசு அறிவித்துள்ளது.
துருக்கியுடனான உறவுகளை குறைத்துக் கொள்வதாகவும் எகிப்து கூறியுள்ளது. நாட்டின் உள்விவகாரங்களில் துருக்கி தொடர்ந்து தலையீடுகளை மேற்கொண்டு வருவதாக எகிப்தின் வெளியுறவு அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார். துருக்கியிலுள்ள தமது தூதுவரையும் எகிப்து ஏற்கனவே மீள அழைத்துவிட்டது.
இஃவானுல் முஸ்லிமீனைச் சார்ந்த முஹம்மது முர்ஸி எகிப்தில் முதன் முதலாக நடந்த ஜனநாயக தேர்தலில் பெரும்பான்மையுடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை ராணுவ சதிப் புரட்சி மூலம் எகிப்தின் ராணுவம் வெளியேற்றியது.
இதனை துருக்கி விமர்சித்திருந்தது. “பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம்” என்ற பேரில் இஃவானுல் முஸ்லிமீனின் உறுப்பினர்களை எகிப்தின் இடைக்கால சர்வாதிகார ஆட்சியாளர்கள் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.
மேலும் ஜனநாயகத்தை மீட்க கோரி நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment