Tuesday, August 6, 2013

தெலுங்கானா : 'முதல்'வராக ஒரு தலித்!


தனி மாநிலமாகப் பிரிக்கப்பட உள்ள தெலுங்கானாவின் முதல்வராக
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் ஆவார் என்றும்,
அதன் பொருட்டே தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியாயின. ஆனால், தெலுங்கானா மாநிலத்தின் முதல் முதல்வராக தனது கட்சி சார்பில் வெற்றிபெறும் ஒரு தலித் இனத்தவரை ஆக்க விரும்புவதாகவும், தனக்கு முதல்வராகும் எண்ணம் இல்லை என்றும் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் "தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட்ட பின்னர் எங்கள் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெறும் தலித் சட்டமன்ற உறுப்பினரை மாநிலத்தின் முதல் முதலமைச்சராக நியமிப்போம" என்று கூறினார்..
அவர் மேலும் கூறுகையில் "தெலுங்கானாவின் மொத்த மக்கள் தொகையான 3.5 கோடி பேரில் 85 சதவீத மக்கள் பின்தங்கிய, பட்டியல் இன, சிறுபான்மை பிரிவுகளை சேர்ந்தவர்கள்: என்றார். முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் தான் பங்கேற்கப் போவதில்லை என்றும் ஆயினும்  மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தெலுங்கானா மாநில அரசின் உயர்நிலை ஆலோசனைக் குழுவில் இடம் பெறக் கருதியுள்ளதாகவும் என்றும் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment