நாகர்கோவில்: கோட்டார், டிவிடி காலனி பகுதியில் இந்து முன்னணி மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இக்கட்டடத்தின் கீழ்ப் பகுதியில் இந்த முன்னணி மாவட்ட அலுவலகம் உள்ளது.
முதல் தளத்தில், இந்து முன்னணி முன்னாள் மாவட்டத் தலைவர் தங்கசாமியின் குடும்பத்தினர் தங்கியுள்ளனர் அப்பகுதியைக் காலி செய்யும் படி இந்து முன்னணியினர் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று காலை இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், ஏராளமான இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, அவர்களுக்கும் முதல் தளத்தில் வசிக்கும் தங்கசாமியின் குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், ஏராளமான இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, அவர்களுக்கும் முதல் தளத்தில் வசிக்கும் தங்கசாமியின் குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்து முன்னணியினர், அப்பகுதியை காலி செய்ய வேண்டும் எனக் கூறி அங்கு சென்று ரகளையில் ஈடுபட்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த வெடிப் பொருட்களை எடுத்துச் சாலையில் வீசினர். மேலும் அப்பகுதியில் இந்து முன்னணி கொடியைக் கட்டினர். அப்போது இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
இது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறை மாவட்டக் காவல்துறைக் கண்கானிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் காவலர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து பாதுகாப்பிற்காக அப்பகுதியில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டனர். , அப்பகுதியில் இருந்த கடைகளும் அடைக்கப்பட்டன.இந்துமுன்னணி அலுவலகத்தில் வெடிப்பொருட்கள் இருந்தது நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடக்கவுள்ள நிலையில் ஏதாவது நாசவேலைகளுக்காக இந்த வெடிப்பொருட்கள் பதுக்கப்பட்டிருந்தனவா எனப் பொதுமக்கள் சந்தேகப்படுகின்றனர்.
No comments:
Post a Comment