இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இரு நாடுகளும் எல்லை மீறுவதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், "நம்மிடையே உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் நட்பு முறையில் உட்கார்ந்து பேசி அமைதியான சூழ்நிலையில் ஒருவரின் கரத்தை ஒருவர் பற்றிக் கொண்டு, திறந்த மனதுடனும், தூய்மையான இதயத்துடனும் நாம் உட்கார்ந்து பேசுவோம்" என்று இந்தியாவுக்கு நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இந்தியர்கள் மீது அன்பும் பற்றுதலும் கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாகிஸ்தான் அரசு பொறுப்பேற்க வேண்டும் என, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment