Friday, August 2, 2013

சவூதி: மெட்ரோ ரயில் பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கம்

சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் சுமார் 176 கல் தொலைவு செல்லும் வகையில்,
85 நிலையங்களைக் கொண்டு மெட்ரோ (நகர்வளவுத் தொடர்வண்டி) போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற உள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு முதல் இந்தத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளனவாம். இந்தத் தொடர்வண்டி ஓட்டுநரே இல்லாமல் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறு வழிப்பாதையாக அமைய உள்ள இந்த இருப்புப் பாதைத் தடம் ‘பாலைவனத்தின் அதிசயம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தொடர்வண்டி நகரைச் சுற்றி 176 கல் தூரம் ஓடி 85 நிலையங்களை இணைக்கும் என்றும் அரசு ஊழியர்கள், மாணவர்கள்,
அயல்நாட்டுப் பணியாளர் ஆகியோருக்கு உதவிகரமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரியாத் நகரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தத் திட்டம் உதவும் என்று சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment