Friday, August 2, 2013

கூண்டோடு தி.மு.க.வில் இணையும் பா.ம.கவினர்!

காஞ்சிபுரம்: பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி தனது ஆதரவாளர்களுடன் கூண்டோடு தி.மு.க.வில் இணைகிறார். 
கடந்த 31 ஆம் தேதி மூர்த்தி, ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதன் அடுத்தக் கட்டமாக இவரது ஆதரவாளர்கள் 2000 பேருடன் வரும் 13 ஆம் தேதி தி.மு.க.வில் அதிகாரப்பூர்வமாக இணையும் விழா நடத்த முடிவு செய்துள்ளார்.

மூர்த்தியை தொடர்ந்து மறைமலைநகர், நகர செயலாளர் கருணாநிதி என்பவரும் தி.மு.க. வில் இணைந்துள்ளது பா.ம.க வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காஞ்சிபுரம் பா.ம.க. கூடாரம் கலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment