Tuesday, August 13, 2013

மோடியின் சத்பாவனா யாத்திரை மோசடி என்று தகவல் அறியும் உரிமை ஆவணம்!

புதுடெல்லி: கடந்த குஜராத் சட்டப்பேரவைத்தேர்தலுக்கு முன்னோடியாக குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி நடத்திய சத்பாவனா யாத்திரை மோசடி என்று தகவல் அறியும் உரிமை ஆவணம் கூறுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருளாதார உதவியை மோடி சத்பாவனா யாத்திரையின் போது அறிவித்திருந்தார். ஆனால், தேர்தல் முடிந்து இவ்வளவு காலம் கழிந்த பிறகும் அரசு இத்தொகையை அனுமதிக்கவில்லை என்று எதிர்கட்சியான குஜராத் பரிவர்த்தன் பார்டிக்கு கிடைத்த தகவல் அறியும் உரிமை ஆவணங்கள் கூறுகின்றன. மூன்று தினங்களை கொண்ட யாத்திரையில் 26 மாவட்டங்களில் 39,769 கோடி ரூபாய்க்கான திட்டங்களை மோடி அறிவித்தார். அமரேலி மாவட்டத்திற்கு 1004 கோடி ரூபாயும், பழங்குடியினர் வாழும் மாவட்டமான தஹோதிற்கு 1,583 கோடி ரூபாயும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், உதவி இதுவரை கிடைக்கவில்லை என்று மாவட்ட கலெக்டர்கள் கூறுகின்றனர். திட்டம் குறித்த வினாக்கள் நிதியமைச்சகம் புறக்கணித்துள்ளதாக கலெக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

குல்பர்க் சொஸைட்டி கூட்டுப்படுகொலையில் தனக்கும் தனது கூட்டாளிகளுக்கு சிறப்பு புலனாய்வுக்குழு நற்சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து மோடி சத்பாவனா என்ற மக்களை ஏமாற்றும் யாத்திரையை துவங்கினார். சமூக நல்லிணக்கத்தை நோக்கமாக கொண்டு யாத்திரையை நடத்துவதாக மோடி கூறினார். ஆனால், இது மோடியின் அரசியல் நாடகம் என்று சமூக ஆர்வலர்களும், எதிர்கட்சியினரும் கூறியிருந்தனர்.

No comments:

Post a Comment