கெய்ரோ: அரசியல் மோதல்கள் நீடித்துவரும் எகிப்தில் பிரச்சனைகளை முடிவுக்கும் கொண்டுவரும் முயற்சியை அல் அஸ்ஹர் பல்கலைக்கழக தலைவரான முஹம்மது அல் தய்யிப் துவக்கியுள்ளார். ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்தின் முதல் அதிபரான முஹம்மது முர்சியை அநியாயமாக ராணுவப் புரட்சியின் மூலம் அநியாயமாக பதவி நீக்கம் செய்ததை ஆதரித்தவர்தாம் முஹம்மது தய்யிப் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எகிப்தின் அனைத்து பிரிவினரையும் உட்படுத்தி இவ்வார இறுதியில் பேச்சுவார்த்தை நடத்த முஹம்மது தய்யிப் தலைமையில் முயற்சிகள் துவங்கியுள்ளன.
இப்பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், கலாச்சார தலைவர்களும் கலந்துகொள்ளவேண்டும் என்று தய்யிப் அழைப்பு விடுத்துள்ளார். தேசிய நல்லிணக்க கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தய்யிப், தேதியை குறிப்பிடவில்லை .ஆனால், சட்டவிரோத முயற்சிகள் எதனையும் ஆதரிக்கமாட்டோம் என்று இஃவானுல் முஸ்லிமீன் அறிவித்துள்ளது. முர்ஸியை மீண்டும் அதிபராக்கினால்தான் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்வோம் என்று இஃவான் அறிவித்துள்ளது.
முர்ஸிக்கு ஆதரவாக தற்போதும் போராட்டம் எகிப்தில் நடந்து வருகிறது. நேற்று 10 நகரங்களில் ஜனநாயக ஆதரவாளர்கள் துவக்கிய பேரணி நஹாதா சதுக்கத்தில் முடிவடைந்தது. அனைத்து பிரிவினரும் அமைதியின் பாதைக்கு திரும்ப ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் அழைப்பு விடுத்துள்ளார்.
- See more at: http://www.thoothuonline.com/%e0%ae%8e%e0%ae%95%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%ae%e0%ae%be/#sthash.udSIbEvE.dpuf
No comments:
Post a Comment