Tuesday, July 23, 2013

மோகன் பாகவத்தின் நெருக்கம் மோடிக்கு உதவியது!


modi_b_22--10--2012புதுடெல்லி:பிரதமர் வேட்பாளர் பதவிக்கான அத்வானியுடன் நடந்த மல்யுத்தத்தில் மோடிக்கு சாதகமானது ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத ஹிந்துத்துவா இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத்துடனான நெருக்கமாகும். பாகவத்தின் தந்தையான மதுகர் என்பவர்தாம் மோடியை ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு அழைத்து வந்தார். 1949-ஆம் ஆண்டு சவ்ராஷ்ட்ரா மற்றும் குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடுகளை தீவிரப்படுத்த மதுகர் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆரிய சமாஜமும், ஹிந்துமகா சபையும் ஹிந்துத்துவா கொள்கைக்கு ஆதரவாக பண்படுத்திய மண்ணில் ஆர்.எஸ்.எஸ்ஸை வளர்ப்பது மதுகருக்கு சிரமமான பணியாக அமையவில்லை.
மதுகரிடம் தனது மரியாதையை தெரிவிக்க மோடி மறப்பதில்லை. 2009-ஆம் ஆண்டு மோகன் பாகவத் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நடந்த பாராட்டு விழாவில் மோடி, மதுகரைக் குறித்து அதிகம் நினைவுக் கூர்ந்தார்.
சங்க்பரிவாரத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் பா.ஜ.கவின் விவகாரங்களில் மோகன் பாகவத் தலையிடத்துவங்கினார். பா.ஜ.கவின் தலைவரை தேர்ந்தெடுப்பதில் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு முக்கிய பங்குண்டு என்பதை வெளிப்படையாக தெரிவித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆவார்.
கடந்த பத்து ஆண்டுகளில் பா.ஜ.கவின் சட்டத்திட்டங்களில் ஏற்படுத்திய திருத்தங்கள் மூலம் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவின் மீதான தனது பிடியை இறுக்கியது. இதனடிப்படையிலேயே பா.ஜ.கவின் அமைப்பு செயலாளராக ராம்லால் என்பவர் நியமிக்கப்பட்டார். ராம்லாலின் இரண்டு உதவியாளர்களும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஆவர். கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான முரளீதர் ராவும், ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு நம்பிக்கையானவர். ஆர்.எஸ்.எஸ் பரிந்துரைப்பவர்களே அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்படுவது தற்போது வழக்கமாகிவிட்டது.
2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் மோடி முக்கிய பங்கு வகித்ததும் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு மோடி மீதான மதிப்பை அதிகரித்துள்ளது. தீவிரவாதிகளை(?) விசாரணை இல்லாமல் சுட்டுத்தள்ளுவது, சிறுபான்மையினரை ஒதுக்கியது உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு அரசியலின் சிறியதொரு முன்மாதிரியாக சங்க்பரிவாரம் குஜராத்தை காண்கிறது.
2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சிறப்பு விசிட் நடத்திய மோடி, மோகன் பாகவத், பய்யாஜி ஜோஷி, சுரேஷ் சோனி உள்ளிட்ட பிரமுகர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தான் எப்பொழுதும் ஆர்.எஸ்.எஸ்ஸின் நம்பிக்கைக்கு பாத்திரமானவனாக திகழ்வேன் என்று உறுதி அளித்தார். இதனைத்தொடர்ந்து பிரதமர் பதவிக்காக ஏங்கிக்கொண்டிருந்த அத்வானிக்கு எதிராக சங்க்பரிவார் தலைவர்கள் காய் நகர்த்தல்களை துவக்கினர்.
அதேவேளையில் மோடிக்கு ஆதரவாக குஜராத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளே மிஞ்சுவர் என்று அவரது எதிர்கூட்டணியான டெல்லி க்ளப் என்று விமர்சகர்கள் அழைக்கும் அத்வானி-சுஷ்மா-ஜெட்லி கூட்டணி கருதுகிறது.

No comments:

Post a Comment