Wednesday, July 3, 2013

அமெரிக்கா இந்தியாவின் ரகசியங்களை திருடவில்லையாம் – குர்ஷித் கூறுகிறார்!


salman_khurshid_12_1234306fபுதுடெல்லி:அமெரிக்க ரகசிய புலனாய்வு துறையினர் இந்தியாவின் ரகசியங்களை உண்மையில் திருடவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்ள புரூனைக்கு வந்த குர்ஷித், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறியது: இந்தியாவின் ரகசியங்களை அவர்கள் திருடவில்லை.மாறாக, தொலைபேசி அழைப்புகள், இ-மெயில்கள் ஆகியவற்றை கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்கின்றனர்.இதன் மூலம் பல்வேறு நாடுகளில் தீவிரவாத தாக்குதல்களை தடுக்க அவர்களால் முடிகிறது என்றுகுர்ஷித் கூறினார்.

குர்ஷித்தின் கூற்றுக்கு சி.பி.எம் கட்சியின் பொலிட் பீரோ கண்டனம் தெரிவித்துள்ளது.அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தகவல்களை திருடியது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பிரச்சனை இல்லை என்று பொலிட் பீரோ குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவின் தகவல்களை திருடிய அமெரிக்காவுக்கு கடுமையான எதிர்ப்பை இந்திய அரசுதெரிவிக்கவேண்டும் என்று பொலிட் பீரோ வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment