வாஷிங்டன்:அமெரிக்க ராணுவ வீரர் பிராட்லி மானிங் தேசத்துரோகி அல்ல என்றும், அவர் உண்மையை உரக்க கூறுபவர் என்றும் அவரது வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ரகசியங்களை விக்கிலீக்ஸிற்கு கசியவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் அமெரிக்காவில் உள்ள ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் வேளையில் மானிங்கின் வழக்குரைஞர் டேவிட் கும்ப்ஸ் , மானிங்கின் செயலை நியாயப்படுத்தி வாதிட்டார். ஆனால், அமெரிக்கா வைத்திருந்த நம்பிக்கையை அவர் தகர்த்துவிட்டார் என்று அரசு வழக்குரைஞர் வாதிட்டார்.
ஆயுள்தண்டனை கிடைக்கக்கூடிய, எதிரிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டு உள்பட 21 வழக்குகள் மானிங்கின் மீது சுமத்தப்பட்டுள்ளது. உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அமெரிக்க மக்கள் அறியவேண்டும்.மக்கள் கவனத்தை திசை திருப்புவதற்காக ரகசியங்களை மானிங் வெளியிடவில்லை.மாறாக, எதிர்விளைவுகளை தெரிந்தே எல்லாவற்றையும் செய்தார். ஈராக்கிலும், ஆப்கானிலும் என்ன நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பதை அமெரிக்க குடிமக்கள் அறிந்திருக்கவேண்டும் என்பதற்காக ராணுவ ரகசியங்களின் ஆவணங்களை மானிங் கசியவிட்டார்.’ என்று அவரது வழக்குரைஞர் டேவிட் கும்ப்ஸ் தனது வாதத்தை தொடர்ந்தார்.
கடந்த ஒரு வருட காலமாக ரகசிய இடத்தில் தனிமை ச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மானிங்.
No comments:
Post a Comment