மீரட்:உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் இரண்டு சமூகங்களிடையே நிகழ்ந்த கலவரத்தில் 2 பேர் பலியானார்கள்.12 பேருக்கு காயம் ஏற்பட்டது.
கோயில் ஒன்றில் உச்சபட்ச சப்தத்தில் ஸ்பீக்கர் வைத்ததை சிலர் எதிர்த்ததை தொடர்ந்து மோதல் உருவானது. மீரட்டில் நக்லமால் கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மோதலின் போது சுடப்பட்டு ஒருவர் பலியாகியுள்ளார். இளைஞரின் மரணத்தைக் கண்ட அதிர்ச்சியில் 55 வயது பெண்மணி மாரடைப்பால் மரணித்துள்ளார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக 6 பேர் கைதுச்செய்யப்பட்டுள்ளனர். கிராமத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பணியில் தவறிழைத்ததாக குற்றம் சாட்டி போலீஸ் சூப்பிரண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment