புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரி பி.பி. பாண்டேவின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை ஆட்சேபித்து பாண்டே மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கில் சிபிஐ-யால் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவர், இப்போது தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் இருந்து சிபிஐ-யிடம் ஒப்படைக்கும்படி குஜராத் உயர் நீதிமன்றம் 2011-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி உத்தரவிட்டது.
போலி என்கவுன்ட்டரில் இஷ்ரத்தும் மற்ற மூவரும் கொல்லப்பட்டனர் என்று சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்திருந்தது. முன்னதாக பாண்டேவின் மனுவை விசாரித்த நீதிபதிகள் ஞான சுதா மிஸ்ரா, குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, “சிபிஐ விசாரணையை ஆட்சேபிப்பதற்கு வலுவான காரணம் ஏதும் இல்லை’ என்று கூறி மனுவை நிராகரித்துவிட்டது. சிபிஐ தாக்கல் செய்த 2-வது குற்றப்பத்திரிகையில் பாண்டேவின் பெயர் இடம் பெற்றிருந்தது.
No comments:
Post a Comment