Sunday, January 20, 2013

அல்ஜீரியா:ராணுவ நடவடிக்கைக்கு பலத்த கண்டனம்!


ராணுவ நடவடிக்கை
அல்ஜியர்ஸ்:நேற்று முன் தினம் அல்ஜீரியன் இயற்கை எரிவாயு நிலையத்தில் நுழைந்து ஆயுதக்குழுவினர் பிடித்து வைத்திருக்கும் பிணைக் கைதிகளை மீட்பதற்காக அல்ஜீரியா ராணுவம் நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்தை உருவாக்கியுள்ளது.
பிணைக் கைதிகளை பிடித்தவர்கள் மீது விமான தாக்குதல் நடத்தும் முன்பு எந்த நாட்டுடனும் அல்ஜீரியா கலந்தாலோசிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இயற்கை எரிவாயு நிலையத்தை தற்போதும் அல்ஜீரியா ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. நிலையத்திற்குள் மேலும் பிணைக்கைதிகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் 44 பேரை எரிவாயு நிலையத்திற்குள் போராளிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக பி.பி.சி கூறுகிறது. ஆனால் 100க்கும் மேற்பட்டோர் உள்ளதாக ராணுவம் கூறுகிறது.
நேற்று முன் தினம் எதிர்பாராத விதமாக அல்ஜீரியா ராணுவம் நடத்திய தாக்குதலில் 30 பிணைக்கைதிகளும் 11 போராளிகளும் கொல்லப்பட்டனர். ஆனால், கொல்லப்பட்டவர்களைக் குறித்து மர்மம் நீடிக்கிறது. எட்டு நார்வே நாட்டவர்கள், 14 ஜப்பான் நாட்டவர் உள்பட 20க்கும் மேற்பட்டவர்கள் குறித்து ராணுவத்திற்கு தகவல் இல்லை.

No comments:

Post a Comment