கெய்ரோ:எகிப்தின் முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் மீதான வழக்கில் மறு விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.ஆயுள் தண்டனைக்கு எதிராக முபாரக் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு எகிப்தின் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.முன்னாள் உள்துறை அமைச்சர் உள்பட முபாரக்கின் நெருங்கிய ஆதரவாளர்கள் சமர்ப்பித்த மேல் முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துள்ளது.
முப்பது ஆண்டுகளாக நீண்ட ஹுஸ்னி முபாரக்கின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக எழுச்சிப் போராட்டம் நடத்திய ஜனநாயக போராளிகளை கொலைச் செய்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் கெய்ரோ குற்றவியல் நீதிமன்றம் ஹுஸ்னி முபாரக் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளுக்கு ஆயுள் தண்டனையை வழங்கியது.கொலைகளை தடுப்பதற்கு முபாரக் தவறிவிட்டார் என்பது குற்றச்சாட்டு.84 வயதான முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து நடந்த புரட்சி போராட்டத்தில் 800க்கும் மேற்பட்ட மக்கள் பலியானதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment