
பீஜிங்:சீனாவின் குங்சூ நகரில் சீன அரசின் ஊடக தணிக்கை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் ஊடகவியலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு இரண்டாவது நாளாக நேற்றும் ஆர்பாட்டக்காரர்கள் ஊர்வலங்களை நடத்தினார்கள்.
குங்சூ நகரில் உள்ள சதர்ன் வீக்லி என்கிற செய்தித்தாள் அலுவலகத்திற்கு அருகில் நிறையபேர் குழுமியதாகவும், அவர்களில் சிலர் கருப்பு முகமூடியணிந்து காணப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வேறு சிலர் ஊடகச் சுதந்திரத்தின் மரணம் என்று தாங்கள் வர்ணிக்கும் போக்குக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மலர்களை கொண்டுவந்திருந்ததனர்.
இந்நிலையில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தரவுப்படி, சீனா முழுமையிலும் இருக்கும் பெரும்பான்மை செய்தித்தாள்களில் நேற்று ஒரு தலையங்கம் எழுதிவெளியிட்டிருந்தன. அதில் ஊடகங்கள் மீது அரசாங்கம் தொடர்ந்து கட்டுப்பாடு வைத்திருக்கவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதேசமயம் சில தினசரிகள் இந்த தலையங்க கட்டுரையை வெளியிடவில்லை. இந்த கட்டுரையின் உள்ளடக்கத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சில தினசரிகளின் இணையதளங்களில் தன்னிலை விளக்கம் அளிக்கப்பட்டிருந்து.
No comments:
Post a Comment