வாஷிங்டன்:1962-ஆம்
ஆண்டு சீனா, இந்தியாவை தாக்குவதற்கு 6 மாதங்கள் முன்பாக அந்நாட்டின் மீது
அணுகுண்டை வீச அமெரிக்க அரசு ஆலோசித்த தகவல் வெளியாகியுள்ளது.கம்யூனிச தேசம் இந்தியாவை தோற்கடிப்பதை தடுப்பதற்காகவே இவ்வாறு ஆலோசனை நடத்தியதாக கென்னடி குடும்பத்தில் பிரபல நபர் காரலைன் கென்னடியும், டெட்விட்மரும் இணைந்து எழுதியுள்ள ’லிசனிங் இன்:தி சீக்ரெட் வைட் ஹவுஸ் ரெக்கார்டிங் ஆஃப் ஜான் எஃப் கென்னடி’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
மீண்டும் சீனா, இந்தியாவை தாக்கினால் சீனாவில் அணு குண்டை வீசவேண்டும் என்று 1963-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி வெள்ளை மாளிகையில் மூத்த ராணுவ தலைவர்களும் பாதுகாப்புச் செயலாளர் ராபர்ட்
மக்னமராவும் பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment