Monday, June 11, 2012

IFF நடத்திய இபாதுர் ரஹ்மான் இஸ்லாமிய நிகழ்ச்சி


IFF இபாதுர் ரஹ்மான் இஸ்லாமிய நிகழ்ச்சி 2
ஜித்தா:இந்திய தமிழ் மக்களிடையேயான சமூக சந்திப்பு மற்றும் குழந்தைகளின் இஸ்லாமிய அறிவை மேம்படுத்தும் வகையில் கடந்த 31.05.2012 வியாழன் இரவு 08;00 மணியளவில் இந்தியா ஃபெடர்னிட்டி ஃபோரம் இபாதுர் ரஹ்மான் என்ற இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சியை ஜித்தா இம்பாலா வில்லாவில் தமிழ் மக்களுக்காக நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் ஜனாப். மெஹபூப் ஷெரீப் அவர்கள் அல்லாஹ்வின் நல்லடியார்களுக்குரிய பண்புகள், தொழுகை மற்றும் இன்னபிற இபாதத்துகள் குறித்தும், இம்மை மறுமை வாழ்க்கை குறித்தும்   இறைவேதத்தில் இருந்தும்,  அண்ணலாரின் வாழ்வில் இருந்தும் மேற்கொள் காட்டி உரையாற்றினார்கள்.
மேலும் அவர் தனது உரையில்; ‘பரபரப்பான வாழ்க்கைச் சூழல் மற்றும் வசதியான வாழ்க்கை முறையால் நமது இறைவனைத் துதிப்பதிலிருந்து, நமக்கும் நமது ரப்புக்கும் இடையேயான தூரம் அதிகமாகிவிடக் கூடாது’ என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குழந்தைகளின் இஸ்லாமிய அறிவுத்திறனை மேம்படுத்துவதோடு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தி வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்தியா ஃபெடர்னிட்டி ஃபோரத்தின் ஜித்தா தலைவர் ஜனாப். அஸ்ரப் முரையூர் அவர்கள் இந்தியா ஃபெடர்னிட்டி ஃபோரத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் சமூக பணிகள் குறித்து விளக்கினார்.
இந்திய தூதரகம் மற்றும் சவூதி சுகாதார அமைச்சகத்தின் உதவியுடன் செய்துவரும் ஆரோக்கிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் ஹஜ் பயணிகளுக்காக ஆற்றிவரும் சேவைகள் தங்களின் பிரதான பணிகளாக குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியை இந்தியா ஃபெடர்னிட்டி ஃபோரம், ஜித்தாவின் தமிழ் பிரிவு தலைவர் சகோ. ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் கிராத் ஓதி வரவேற்புரையாற்றினார், இதனைத் தொடர்ந்து இந்தியா ஃபெடர்னிட்டி ஃபோரத்தின் சமூகநல பொறுப்பாளர் சகோ. அல்அமான் அவர்கள் இந்தியா ஃபெடர்னிட்டி ஃபோரம் செய்துவரும் சேவைகள் குறித்து உரையாற்றினார். சகோ. ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் நன்றியுரை ஆற்ற இரவு விருந்துடன் இனிதே நிகழ்ச்சி முடிந்தது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 250க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.


                                                                                                      courtesy : www.thoothuonline.com

No comments:

Post a Comment