
டமாஸ்கஸ்:சிரியாவின் காட்டுமிராண்டி பஸ்ஸாருல் ஆஸாதின் ராணுவமும், ஆதரவு ஆயுதக் கும்பலும் நடத்திவரும் மனித வேட்டை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஐ.நாவின் வெறும் கண் துடைப்பான கண்டனங்கள் ஒருபுறம், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் நயவஞ்சக வேடம் மறுபுறம், இதற்கிடையில் அரபு, முஸ்லிம் நாடுகளின் கையாலகத்தனம் இவற்றிற்கு மத்தியில் சிரியா மக்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஹமா மாகாணத்தில் கைபர் கிராமத்தில் பஸ்ஸார் ஆதரவு ஆயுதக் கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில் 90க்கும் மேற்பட்ட மக்கள் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.
சிரியாவுக்குள் பயணிக்கும் ஐநா கண்காணிப்பாளர்களுடன் கைபர் கிராமத்துக்குச் சென்ற பிபிசி செய்தியாளர், அக்கிராமம் பேரழிவுக்கு உள்ளாகியிருப்பதாகவும், எல்லாத் திசையிலும் கட்டிடங்கள் எரிந்து கரிக் கூண்டாக நிற்பதாகவும் கூறுகிறார்.
அதிலே ஒரு கட்டிடத்தில் மனித மூளையின் சிதறிய பாகத்தையும் உறைந்த இரத்தத்தையும் தான் கண்டதாக அவர் தெரிவிக்கிறார்.
கடந்த புதன்கிழமையன்று பல பெண்களும் குழந்தைகளுமாக சுமார் 80 பேர் அரசாங்க ஆதரவு ஆயுதக் குழுக்களால் கொல்லப்பட்டதாக எதிர்ப்பாளர்கள் கூறுகின்ற இந்த கிராமத்தில் சடலங்களின் அறிகுறிகள் கூட இல்லை என பிபிசி செய்தியாளர் கூறுகிறார். சடலங்கள் கிடைக்கவில்லை என்றாலும், அந்த ஊரில் ஏதோ பயங்கரம் நடந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிவதாக அவர் தெரிவிக்கிறார்.
தாம் கொன்ற ஆட்களின் சடலங்களை ஆயுதக் குழுவினர் அப்புறப்படுத்திவிட்டனர் என எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment